சென்னை: நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர் மாவட்டங்களில் இன்று அதிகனமழை பெய்யும் என்றும், நாளையும் டெல்டா மாவட்டங்கள் மழையின் ஹாட் ஸ்பாட்டாக இருக்கும் என தனியார் வானிலை ஆய்வாளரான வெதர்மேன் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.
மேலும், இன்று தஞ்சாவூர், திருச்சி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், விழுப்புரத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் உருவாகி உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக சென்னை உள்பட பல மாவட்டங்களில் பரவலாக கனமழை முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது. இதையொட்டிஇ, இன்று பல மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதுடன், தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. பேரிடர் மீட்பு துறை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், வங்கக்கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அது வலுவடைந்து தெற்கு இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வருகிறது. இது இன்று பெங்கல் புயலாக மாறி தமிழக கடற்கரை பகுதியில் கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தனியார் வானிலை ஆய்வாளரான வெதர்மேன் பிரதீப் ஜான், தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இன்று நாகை முதல் சென்னை வரை கடற்கரையோரம் (KTCC) ஒரு அருமையான மழை நாள்.
நாளையும் டெல்டாவிலிருந்து கடலூர் வரை பெருமளவு வரும். இன்றைக்கு ஹாட் ஸ்பாட் பிராந்தியமாக இருக்கும்.