யாழ்ப்பாணம்,

தென்மேற்கு பருவமழை காரணமாக இலங்கையில் கடந்த ஒரு வாரமாக கனம பெய்து வருகிறது.

இதன் காரணமாக பல இடங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மண் சரிவும் ஏற்பட்டுள்ளது. இலங்கையின் களுத்துறை, புளத்சிங்கள பகுதிகளில் பெய்துவரும் கன மழையின் காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

நிலச்சரிவில் சிக்கி இதுவரை 250க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாகவும், நூற்றுகணக்கா னோரை காணவில்லை என்றும் கூறப்படுகிறது. அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது.

இலங்கைக்கு உதவு புரிய ஐ.நா சபையையும், உலக நாடுகளுக்கும்  இலங்கை அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு பருவமழை தொடக்கம் முதலே பேய் மரழை பெய்து வருகிறது.  40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு கொட்டி தீர்க்கும் மழை காரணமாக இலங்கையின் தென்மேற்கு பகுதி முழுவதும் வெள்ளக் காடாக காட்சி அளிக்கிறது.

இயற்கையின் கோர தாண்டவத்திற்கு 5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1 லட்சத்து க்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் பலியானோரின் எண்ணிக்கை 250 ஆக உயர்ந்து உள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மீட்பு பணியில் இலங்கையின் முப்படைகளும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.

இதற்கிடையில் வங்கக் கடலில் உருவாகி உள்ள மோரா புயல் காரணமாக  இலங்கையில் கனமழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இலங்கை மக்கள் மேலும் அச்சம் அடைந்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்காக  இந்தியாவில் இருந்து 3 கப்பலில் நிவாரண பொருட்கள்,மருத்துவ உதவிகள்  அனுப்பி வைக்கப்பட்டன. அவைகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வினியோகிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.