சென்னையின் பல்வேறு பகுதிகளில் கடந்த 1 மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது.

இரவு 9:30 மணிக்கு துவங்கிய மழை தற்போது வரை நீடித்து வருகிறது.

இதனால் சாலைகளில் மழை நீர் ஆறாக ஓடுகிறது. பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.

மேலும், பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி நடைபெறுவதால் பல சாலைகள் சேரும் சகதியுமாக மாறியுள்ளது.

இதனால் இரவு பணி முடிந்து வீடு திரும்புவோர் பெரும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.

https://x.com/chennaiweather/status/1803111358805729301

இருந்தபோதும் இன்று காலை முதல் கொளுத்திய வெயிலுக்கு இதமாக இந்த மழை அமைந்துள்ளது.