சென்னை: சென்னையில் இந்த ஆண்டு, கடந்த 2015-ஐ நினைவுபடுத்தும் வகையில் அதிகன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, இந்திய வானிலை மையம், சென்னை வானிலை மையம் மற்றும் தனியார் வானிலை ஆய்வாளர்களும் எச்சரித்து உள்ளனர். இதனால், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின்பேரில், சென்னையில் பலத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னையில் 180 பகுதிகள் அபாயகரமானவை என கண்டறிந்து முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, வடதமிழ்நாட்டு உள்பட கடலோர மாவட்டங்களில் மிக கன மழைக்கான எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. வங்கக்கடலில் இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்தடுத்த நாட்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து, வட தமிழகம், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும் இதன் காரணமாக, சென்னையில் மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. வரும் 16ந்தேதி ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இன்று இரவு முதலே கனத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், நாளை)சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல் பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணா மலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட் டங்கள், புதுச்சேரியில் ஓரிரு இடங் களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது.
அதுபோல நாளை மறுதினம் 16ங்நதேதி அன்று சென்னை உள்பட வட தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும், தென் தமிழகத்தின் ஒரிரு இடங்களிலும் மற்றும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டடங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் அதிகனமழை பெய்யும். இராணிப்பேட்டை, திருவண்ணா மலை, மகாபலிபுரம் , புதுச்சேரி உள்பட பல பகுதிகளில் கனமழையும், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கள்ளக்குற்றிச்சி மற்றும் கடலோர மாவட்டடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
சென்னையில் 16-ம் தேதி அதிகனமழை எச்சரிக்கை: . இதன் காரணமாக, 16-ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை முதல் அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷணகிரி, தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் களமழையும் சென்னை உள்பட சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான அல்லது கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் பாலசந்திரன் தெரிவித்து உள்ளார்.
இந்த மாதம் பெய்யும் பழையானது, கடந்த 2015ம் ஆண்டு பெய்த பேய் மழைபோல பெரு வெள்ளத்தை கொடுக்கும் என பல வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்து உள்ளனர். அதாவது, கடந்த 2015ம் ஆண்டு டிசம்பரில் பெய்த பெரு மழையால், சென்னை வரலாறு காணாத சேதங்களை எதிர்கொண்டது, பலர் உயிரிந்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதுடன், இந்த வெள்ளப்பெருக்கு மற்றும் பொதுமக்கள் உயிரிழப்புக்கு, நள்ளிரவில் ஏரிகளை திறந்து விட்டதே காரணம் என குற்றம் சாட்டப்பட்டது. அதை சிஏஜியும் உறுதி செய்தது.
அதனால், அதுபோன்று மீண்டும் ஒரு சம்பவம் நிகழாதவாறு, முன்னேற்பாடுகளை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மாநிலம் முழுவதும் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தமிழ்நாடு அரசு தீவிரப்படுத்தி உள்ளது.
சென்னையில் மீண்டும் தண்ணீர் தேங்காதவாறு, சுமார் 4000 கோடி செலவில் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொண்டும், பல பகுதிகளில் தண்ணீர் தேங்குவது தவிர்க்க முடியாத நிலையே உள்ளது. இருந்தாலும் தாழ்வான தண்ணீர் தேங்குவதை உடனே வெளியேற்றும் வகையிலு, சென்னையில் ஏற்படும் வெள்ளத்தில் இருந்து மக்களை பாதுகாப்பாக மீட்டு வருவதற்கு 36 படகுகள் மற்றும் தண்ணீரை வெளியேற்ற . 913 மோட்டார் பம்புகள் வாங்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்து இருந்தது. அதை, தற்போது, பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து, துணைமுதல்வர் உயதநிதி ஸ்டாலின்,நேற்று ( 13ந்தேதி) மாலை, அரசின் கட்டுப்பாட்டு மையத்திற்கு சென்று ஆய்வு செய்ததுடன், அடையாறு நீர் கடலில் கலக்கும் முகத்துவாரங்களில் தூர் வாரப்படுவதை நேரில் சென்று கண்காணித்து, பணிகளை விரைவுபடுத்தினார்.
அதைத்தொடர்ந்து இன்று தமிழக முதல்வர்‘ மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், சென்னை மாநகராட்சி மேயர் மற்றும் அதிகாரிகளுடன் சென்னை மழை தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைள் குறித்து ஆலோசனை நடத்திய, அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளார். அதுபோல தலைமைச்செயலாளரும், மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், அதிகாரிகள் விழிப்புடன் பணியாற்ற பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளார்.
அதேவேளையில், இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழையின்போது தமிழ்நாடு முழுவதும், ஒரு உயிர்சேதம் கூட ஏற்படாத வண்ணம், தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து முன்னேற்பாடுகள் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப் படை மையத்தில் மீட்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. கனமழையின் போது மீட்பு பணிகளில் ஈடுபட மொத்தம் 300 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். ஒரு குழுவுக்கு 30 பேர் வீதம் மொத்தம் பத்து குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு மாநில அவசர கட்டுபாட்டு மையத்துடன் தேசிய பேரிடர் மீட்புப்படை அதிகாரிகள் நேரடி தொடர்பில் உள்ளனர். ரப்பர் படகுகள் உள்ளிட்ட மீட்பு கருவிகளுடன் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
இந்த பரபரப்புக்கு மத்தியில், கடந்த 2015ம் ஆண்டு சென்னை மழை வெள்ள பேரழிவுக்கு காரணமாக ஏரிகளின் நீர் மட்டங்களை தீவிரமாக கண்காணிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
அதன்படி, செம்பரம்பாக்கம் ஏரி 24 அடியில் தற்போது 13.16 அடியாக நீரின் அளவு உள்ளது. அதாவது 1.2 டிஎம்சி நீர் உள்ளது. மேலும் மழை காரணமாக ஏரிக்கு நீர்வரத்து ஏரியிலிருந்து மெட்ரோ குடிநீர் உள்ளிட்ட பணிக்காக 134 கன அடி நீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக செம்பரம்பாக்கம் ஏரியை தொடர்ந்து கண்காணித்து, தேவைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதுபோல, செங்குன்றம் ஏரியில் 14.97 அடியாக நீரின் அளவு உள்ளது. இரண்டு டிஎம்சி நீர் கையிருப்பு உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து 197 கன அடியாக இருந்து வருகிறது.
சோழவரம் ஏரி 18 அடியில் 0.23 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது.
பூண்டி ஏரி 35 அடியில் 20 அடியை எட்டியுள்ளது. நீர்வரத்து 480 கன அடியாக அதிகரித்து வருகிறது.
வீராணம் ஏரி 15 அடியில் 13 அடியை எட்டியுள்ளது. வீராணம் ஏரி நீர்வரத்து அதிகரித்திருப்பதால், 1296 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 426 கன அடி நீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது.
இந்த ஆண்டு, இதுவரை ஏரிகள் நிரம்பும் அளவுக்கு மழை இல்லாததால், ஏரிகளின் மொத்த கொள்ளவில் பாதி அளவே நீர் மட்டம் உள்ளது. அதனால், ஏரிகள் ஒரிரு நாள் மழைக்கு நிரம்ப வாய்ப்பு இல்லை என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
இதற்கிடையில், சென்னையிலும் மழைநீர் தேங்கும் 180 பகுதிகள் கண்டறியப்பட்டு, அவை வெள்ள அபாய பகுதிகள் என சென்னை மாநகராட்சியால் அறிவிக்கப்பட்டு, முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
அதுபோல ‘ மழைநீர் வடிகால் இணைப்புப் பணிகள் முடிக்கப்படாமல் உள்ள 43 பகுதிகளிலும், உடனடியாகப் பணியை முடிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
அதேபோல மழைநீர் தேங்கும் 25 பகுதிகளில் அதிக கவனம் வைக்கவும் பெருநகர சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.
சென்னையில் கடந்த மழையின் போது பாதிப்பு ஏற்பட்ட பிறகுதான் பட குகள் உள்ளிட்ட மீட்பு சாதனங்கள் கொண்டு செல்லப்பட்டு மீட்பு பணிகள் மேற்கொள் ளப்பட்டன. இந்நிலையில், இந்த ஆண்டு மழைநீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து முன்கூட்டியே படகுகள் மற்றும் மீட்பு சாதனங்கள் கொண்டு போய் நிறுத்தப்படும். 15.10.2024 ஆம் தேதிக்குப் பிறகு வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என்பதால், மழைநீர் தேங்கும் பகுதிகளில் மீட்பு சாதனங்கள் கொண்டு போய் நிறுத்தப்படும் என்றும், .‘டிஎன் அலர்ட்’ என்ற செயலி மூலம் பொதுமக்கள் தங்கள் வசிக்கும் பகுதியில் எந்த இடத்தில் மழை நீர் தேங்கும், உடனடியாக அருகில் உள்ள நிவாரண மய்யத்துக்கு செல்ல வேண்டும் என்பன உள்ளிட்ட அனைத்து தகவல்களும் அதில் தெரிவிக்கப்படும் என்று கூறப்பட்டு உள்ளது.
இவை தவிர, மழை பாதிப்பு, வெள்ளம் தொடர்பாக கைப்பேசி மூலமாகவும் பொதுமக்களுக்கு எஸ்எம்எஸ் தகவல் அனுப்பப்படும். அரசு எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்த ஆண்டு திமுக அரசு மேற்கொண்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மக்களை திருப்தி அடைய செய்தாலும், மிரட்டும் மழை அறிவிப்பு, அதனால் எற்படப்போகும் பாதிப்பு கடந்த 2015ஐ நினைவு படுத்துமா? என்ற கேள்வியையும் எழுப்பி வருகிறது.
சென்னையில், திமுக அரசு கடந்த 3 ஆண்டுகளில், சுமார் ரூ.4ஆயிரம் கோடி செலவில் மேற்கொண்ட மழைநீர் வடிகால் பணிகள் மழை வெள்ளப் பாதிப்பில் இருந்து சென்னை மக்களை பாதுகாக்குமா? அது பயனுள்ளதா? அல்லது தேவையற்ற செலவா? என்பது குறித்தும், தற்போது எடுத்து வரும் வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை, பொதுமக்களை மழை வெள்ளத்தில் இருந்து காப்பாற்றுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்…
16ந்தேதி அன்று சென்னையில் 20 செ.மீ. மழை பெய்யும்! ‘ரெட் அலர்ட்’ விடுத்த சென்னை வானிலை ஆய்வு மையம்