சிங்கப்பூர்,

சிங்கப்பூரில் பெய்து வரும் கனமழை காரணமாக பெரும்பாலான பகுதிகளில் வெள்ளத்தில் மிதக்கிறது. இதன் காரணமாக பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.

கடந்த சில நாட்களாக அங்கு மழை பெய்து வருகிது. ஒருசில நாளுக்கு முன்பு மாலை நேரத்தில் சுமார் 1 மணி நேரம் விடாமல் கனமழை பொழிந்தது. இதன் காரணமாக சிங்கப்பூரின் கிழக்கு மாகாணம் பெரும் பாதிப்புக்கு உள்ளானது. அங்கள்ள  பெடோக், டிம்பின்ஸ் மற்றும் சாங்கி உட்பட பல நகரங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டது.

இதன் காரணமாக போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. முழங்கால் அளவுக்கு சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், வாகனங்களும், பொதுமக்களும் கடுமையான பாதிப்புக்கு ஆளாகினர்.

இந்நிலையில் சிங்கப்பூர் வானிலை மையமும் மேலும் இரண்டு நாட்கள் மழை நீடிக்கும் என்றும் அறிவித்து உள்ளது.

எலக்ட்ரானிக் பொருட்களின் உலகச் சந்தையாக திகழும் சிங்கப்பூரில் மழை நீர் சேமிப்பு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதனால் மழை நீர் வீணாகாமல் அப்படியே நீர்நிலைகளில் சேகரிக்கப்பட்டு பின்னர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீராக விநியோகிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.