மியான்மர்,

மியான்மரில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகி உள்ளது.

நிலநலடுக்கம் காரணமாக பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.

ஏற்கனவே இரண்டு 6.30 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 6.0 ஆக பதிவாகி உள்ளது.

இதுகுறித்து மியான்மரின் வானிலை மற்றும் ஹைட்ராலஜி துறை கூறும்போது, மியான்மரின் பாகோ பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், இது பேகோ பகுதியில் ப்யூ நகரத்தின் மேற்கு-தென்மேற்குப் பகுதியின் 27.3 கிமீ தொலைவில் ஏற்பட்டதாகவும் கூறி உள்ளது.

மேலும், மியான்மரில் உள்ள  யாகோன், டான்கோவோ, ப்யூ, பை மற்றும் நியாயி நகரங்கள் உட்பட நாடு முழுவதும் நிலநடுக்கம் ஏற்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நில நடுக்கம் காரணமாக ஏற்பட்டுள்ள சேத விவரங்கள் ஏதும் வெளியாகவில்லை.