சென்னை

ற்போது உருவாகி வரும் நிவர் புயலால் நாளை தமிழகத்தில் பல இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

வங்கக் கடலில் தற்போது நிவர் புயல் உருவாகி வருகிறது.  இந்த புயல் சென்னையை நெருங்கி வருவதாக செயற்கைக்க் கோள் புகைப்படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.  நாளை இந்த புயல் மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே கரைக் கடக்கலாம் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதையொட்டி கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.   புயல் அச்சுறுத்தலால் கடலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது.   பல இடங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டு பொதுமக்களை வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுள்ளனர்.

கடலூர் மாவட்ட பொதுமக்கள் எந்த நேர்த்திலும் உதவிக்கு அழைக்க கட்டுப்பாடு அறை இயங்கி வருகிறது.    சுமார் 55 கிமீ வேகத்தில் காற்று வீசும் எனவும் தமிழ்கத்தில் டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அரசு புயல் நிவாரண முகாம்களை அமைத்துளது.  இந்த முகாம்களுக்கு பொதுமக்கள் தாமாகவே முன் வந்து தங்கிக் கொள்ள வேண்டும் என அமைச்சர் ஆர் பி உதயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.