சென்னை
வடகிழக்கு பருவ மழை அக்டோபர் மூன்றாம் வாரத்தில் பெய்யும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்திய நாட்டில் பல மாநிலங்கள் தென்மேற்கு பருவமழை காலத்தில் நல்ல மழையைப் பெற்று வருகின்றன. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் நல்ல மழை பெய்துவருகிறது. ஒரு சில வேளைகளில் வளிமண்டல சுழற்சி, வெப்பச்சலனம், காற்றின் திசை வேறுபாடு போன்றவற்றால் மழை பெய்யும். இந்த ஆண்டு அவ்வகையில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் நல்ல மழை எய்து வருகிறது.
தென்மேற்கு பருவ மழைக்காலமான ஜூன் 1 முதல் செப்டம்பர் 30 வரையிலான கால கட்டத்தில் ஜூன் 1 ஆம் தேதி தென்மேற்கு பருவ,மழை தொடங்கியது. தமிழகத்தில் வழக்கத்தை விட 24% அதிக மழை பெய்துள்ளது கடந்த 2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை மீண்டும் இயல்பை விட அதிக அளவில் பெய்துள்ளது.
இந்த ஆண்டு கடந்த ஒரு மாதத்தில் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை மற்றும் மிக கன மழை பெய்தது. இதனால் நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்பட்டது. திருப்பூர் தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இரு மடங்கு மழை பெய்துள்ளது.
வட மாவட்டங்கள் மற்றும் சென்னை நகரில் செப்டம்பரில் மழை ஓரளவு தீவிரமாக இருந்தாலும் வழக்கமான அளவிலேயே பெய்துள்ளது. காரைக்காலில் 485 அதிகமாகவும் புதுச்சேரியில் 25% குறைவாகவும் பெய்துள்ளது. இந்த ஆண்டு வட கிழக்கு பருவமழை அக்டோபர் மூன்றாம் வாரத்தில் பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தமிழகத்தில் பல இடங்களின் கனமழை பெய்து வருகிறது.