பெங்களூரு:
கர்நாடகாவின் ஜெயநகர் தொகுதியின் பாஜக வேட்பாளர் பி என் விஜயகுமார் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். இது பாஜகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வரும் மே 12-ந் தேதி கர்நாடக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதன் காரணமாக அங்கு அனல்பறக்கும் பிரசாரம் நடெபற்று வருகிறது.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, பாரதியஜனதா தலைவர் அமித்ஷா, பிரதமர் மோடி போன்றோர் கர்நாடகாவில் முகாமிட்டு தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், பெங்களூர் நகரின் ஜெயநகர் தொகுதி வேட்பாளர் பி என் விஜய்குமார் மாரடைப்பு காரணமாக திடீரென ஏ மரணமடைந்துள்ளார்.
நேற்று ”ஜெயநகர் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த 59 வயதாகும் விஜய்குமாருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து ஜெயதேவா மருத்துவமனையின் இருதவியல் பிரிவில் அனுமதிக்கப்பட்ட விஜயகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்”
இதை மாநில மாநில பாஜ செய்தி தொடர்பாளர் எஸ் பிரகாஷ் உறுதிப்படுத்தி உள்ளார்.
மறைந்த பி என் விஜய்குமார் ஜெயநகர் தொகுதியில் இரண்டு முறை எம்.எல்.ஏ. வாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.