புதுச்சேரி:

ருத்துவ மாணவர்களிடம் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட  அதிக கட்டணம் வசூலித்தாக வந்த புகாரை தொடர்ந்து 3 தனியார் மருத்துவ கல்லூரிக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

புதுச்சேரியில் இயங்கி வரும் அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவக்கல்லூரி, பிம்ஸ் மருத்துவ கல்லூரிகளுக்கு, மாணவர்களிடம் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட 50 ஆயிரம் ரூபாய் கூடுதலாக வசூலித்ததாக வந்த புகார்களை தொடர்ந்து சுகாதாரத்துறை சார்பில்  நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே கடந்த ஆண்டு  நீட் தேர்வு  இல்லாமல் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ மாணவர்கள் சேர்க்கப்பட்டதாக கூறி 770 மாணவர்களை நீக்கி இந்திய மெடிக்கல் கவுன்சில்  அதிரடி நடவடிக்கை எடுத்து பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், தற்போது மாணவர்களிடம் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக சுகாதாரத்துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இது புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.