திண்டுக்கல்:
ட்டன்சத்திரம் அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர்  படுத்து  தூங்கினார்.

வகுப்பறையில் தூங்கும் தலைமை ஆசிரியர்
வகுப்பறையில் தூங்கும் தலைமை ஆசிரியர்

ஒட்டன்சத்திரம்  அருகே உள்ள ஆலயக்கவுண்டன்பட்டியில் என்ற கிராமத்தில் 1989ம் ஆண்டு முதல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்படுகிறது.  இந்த கிராமத்தில் பொதுமக்களும் அதிகமாக இல்லை. இருக்கும் ஒரு சிலர் தங்களது குழந்தைகளை ஒட்டன்சத்திரத்துள்ள தனியார் பள்ளிகளில் சேர்த்து படிக்க வைத்துள்ளனர்.
தற்போ‘து 2 மாணவர்கள் மட்டுமே அந்த பள்ளியில் படிப்பதாக வருகை பதிவேட்டில் உள்ளது. ஆனால் அவர்களும் சரிவர பள்ளிக்கு வருவது இல்லை. இந்த பள்ளிக்கு ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளார். அவரே தலைமை ஆசிரியர்.
நேற்று பள்ளிக்கு குழந்தைகள் யாரும் வராததால் வகுப்பறைகளை பூட்டிவிட்டு, தலைமையாசிரியர்  ஒரு  வகுப்பறையில் தூங்கிவிட்டார். இதை அந்த பகுதியை சேர்ந்த யாரோ ஒருவர் மொபைலில் எடுத்து மற்றவர்களுக்கு அனுப்பி விட்டார். இது அந்த பகுதியில் பரபரப்பாக வலம் வருகிறது.
இதுகுறித்து, தொடக்க கல்வி அலுவலர்:  மாணவர்கள் குறைவாக உள்ள பள்ளிகளை அருகில் உள்ள கிராமத்து பள்ளிகளுடன் இணைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றும், தலைமையாசிரியர் தூக்கியது மதிய உணவு இடைவேளையின் போதுதான் என்று கூறினார்.