சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீது, ஏற்கனவே மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய இரு நீதிபதிகள் முன்பு இன்று விசாரணை நடைபெறுகிறது. அதன்படி, ம நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அமர்வு இன்று விசாரணை நடத்துகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜிமீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுக்கள் கூறப்படும் நிலையில், கடந்த அதிமுக ஆட்சியின்போது அவர் மீது தொடரப்பட்ட ஊழல் பண மோசடி வழக்கின் விசாரணை உச்சநீதிமன்ற உத்தரவுபடி மீண்டும் நடைபெற்று வருகிறது. இந்த ஊழல் குற்றச்சாட்டில், சட்ட விரோத பண பரிவர்த்தனை செய்துள்ளதால், அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வருகிறது. அமலாக்கத்துறையினர், செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடத்தியதுடன், கடந்த ஜூன் 13ஆம் தேதி மீண்டும் ரெய்டு நடத்தி அன்று இரவு செந்தில் பாலாஜி, அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் நெஞ்சுவலிப்பதாக கூறி தனியார் மருத்துவமனையில் சேர்ந்த சிகிச்சை பெற்றதாக கூறப்படுகிறது. தற்போது ஜெயிலில் சொகு வசதியுடன் ஓய்வு எடுத்து வருகிறார்.
இதற்கிடையில், செந்தில்பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்த நிலையில் இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். இதை தொடர்ந்து மூன்றாவது நீதிபதியான கார்த்திகேயன், நீதிபதி நிஷா பானுவின் தீர்ப்புக்கு எதிராக, செந்தில் பாலாஜியை காவல் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கினார். எந்த தேதியில் இருந்து அமலாக்கத்துறை காவல் என இரு நீதிபதிகள் அமர்வு முடிவு செய்யும் என 3வது நீதிபதி கூறியிருந்தார்
இதன் காரணமாக அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு அவரது மனைவி மேகலா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்தார்.
அமலாக்கத்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே கேவியட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆர்ப்புணர்வு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. எந்த தேதியில் இருந்து அமலாக்கத்துறை காவலில் எடுக்கலாம் என்பது குறித்து இன்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே இந்த வழக்கில் மாறுபட்ட தீர்ப்ப்பை வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நிஷா பானு , பரத சக்கரவர்த்தி அமர்வு முன் வழக்கு விசாரணைக்கு வருகிறது.