கார்கில் போரை சித்தரிக்கும் ‘குஞ்சன் சக்சேனா – தி கார்கில் கேர்ள்’ படம் ஆகஸ்ட் 12’ஆம் தேதி OTT தளமான நெட்ஃபிலிக்ஸ்-ல் வெளியிடப்பட்டது.

இந்த படம் இந்திய விமானப் படையை (IAF) மோசமாக சித்தரிப்பதாகவும், விமானப்படையில் பாலியல் பாகுபாடு உள்ளது என தவறாக கூறுவதாகவும் குற்றஞ்சாட்டி, அதற்கு தடைவிதிக்குமாறு மத்திய அரசு சார்பில் மனு தாக்கலானது.

முன்னாள் விமான லெப்டினன்ட் குஞ்சன் சக்சேனாவும் இந்த வழக்கில் ஒரு வாதியாக மாற்றப்பட வேண்டும் என்றும், அவரின் பதிலைக் கோரி அவருக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது.மேலும் திரைப்படத்திற்கு தடை விதிக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.