சென்னை:

ண்டாள் சர்ச்சை தொடர்பாக வைரமுத்து மீது பதிவு செய்த அனைத்து வழக்குகளையும் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து அவதூறாக பேசியதாக இந்துத்துவவாதிகள் சர்ச்சை கிளப்பி வருகிறார்கள். வைரமுத்துவை ஆபாசமாக வசைபாடுவதுடன், அவரை எதிர்த்து போராட்டங்களும் நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் அவர் மீது சிலர் வழக்குகளும் தொடுத்து வருகிறார்கள். இதையடுத்து தன்மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வைரமுத்து மனுத்தாக்கல் செய்தார்.

சென்னை கொளத்தூர் காவல்நிலையத்தில் முருகானந்தம் என்பவர் தொடர்ந்த வழக்கில் வைரமுத்து இந்த மனுவை தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வைரமுத்து கூறிய கருத்தில் தவறில்லை என உயர்நிதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆண்டாள் பற்றி வைரமுத்து தனது சொந்த கருத்தை தெரிவிக்கவில்லை   என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், வைரமுத்து கூறியதை ஏன் அரசியல் ஆக்குகிறீர்கள் என்றும் நீதிமன்றம் அதிரடியாக கேள்வி எழுப்பியுயது.

இந்த வழக்கு விசாரணை முடிவில் ஆண்டாள் சர்ச்சை தொடர்பாக வைரமுத்து மீது பதிவு செய்த அனைத்து வழக்குகளையும் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.