ரயுகு மிஷன்: குறுங்கோளில் இருந்து எடுத்து வரப்பட்ட மண் மாதிரி தரமானது! ஆராய்ச்சியாளர்கள் மகிழ்ச்சி

Must read

ரயுகு குறுங்கோளில் இருந்து மண்மாதிரிகளை எடுத்துவர ஐப்பான் விண்கலத்தை அனுப்பியது. அதன் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட மண், நல்ல தரனமாது, எதிர்பார்த்தை விட சிறப்பாக இருப்பதாக ஐப்பான் ஆராய்ச்சியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.

ஜப்பான் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஜாஷா (JAXA ) ரயுகு மிஷன் என்ற பெயரில் விண்கல் ஆராய்ச்சிக்காக கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் 3ந்தேதி ஹயாபூசா-2 என்ற விண்கலத்தை ஏவியது.  இந்த விண்கலமானது, பூமியில் இருந்து 30 கோடி கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள இந்த குறுங்கோளுக்கு 6 வருட பயணம் செய்து, 2018ம் ஆண்டு ஜூன் மாதம் பூமிக்கு அருகில் உள்ள ரயுகு என்ற  சிறுகோளை அடைந்து சோதனைகள் மேற்கொண்டது.

அதைத்தொடர்ந்து, கடந்த  2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 22 ம் தேதி சிறுகோளின் மேற்பரப்பில் இருந்து ஒரு மாதிரியைச் சேகரித்தது. மேலும்,  ஒரு செப்பு “புல்லட்” சிறுகோளுக்குள் 33அடி அகல பள்ளத்தை உருவாக்கி அதில் இருந்து  சுட்டு 33 அடி அகல தாக்க பள்ளத்தை உருவாக்கியது.  அதிலிருந்து கடந்த  2019ம் ஆண்டு  ஜூலை 11 அன்று ஒரு மாதிரியை சேகரித்து. அதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு (201)  நவம்பர் 2ந்தேதி அங்கிருந்து ஹயாபூசா-2 விண்கலம், மண் மாதிரிகள் அடங்கிய கேப்சூல் வடிவிலான சிறு பெட்டகத்தை பூமிக்கு அனுப்பியது.

இந்த பெட்டகமானது டிசம்பர் 6 ஆம் தேதி தெற்கு ஆஸ்திரேலியாவில் தரையிறங்கியது. ஜப்பான் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஜாக்ஸாவிலிருந்து வந்த ஆராய்ச்சியாளர்கள்,   காப்ஸ்யூலை தரையிறக்கிய இடத்தை கண்டுபிடித்து,  அந்த கேப்சூலை மீட்டெடுத்தனர். பின்னர்,  அது,  ஜப்பானுக்கு அனுப்பப்படுவதற்கு முன்பு காப்ஸ்யூலில் சில ஆரம்ப சோதனைகளை நடத்தப்பட்டது.

பின்னர், அந்த பெட்டகம், ஜப்பானின் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு திறக்கப்பட்டது.  இரண்டு தனித்தனி பகுப்பாய்வுகள் நடத்தப்பட்டன.  ஒன்று சாகா மிஹாரா வளாகத்தில் உள்ள வேற்று கிரக மாதிரி க்யூரேஷன் மையத்தில் நடத்தப்பட்டதாகவும், அதில், இரண்டு ஆய்வுகளும்  ஒரே முடிவையே தெரிவித்துள்ளதாகவும் விஞ்ஞானிகள்அறிவித்து உள்ளனர்.

முதலில், அந்த பெட்டகத்தில் இருந்த மண்ணானது, ரியுகுவிலிருந்து வந்தது என்பதை முதலில்   உறுதிப்படுத்தினர்,  மேலும், அந்த மண் காப்பிகொட்டையை அரைத்தது போல இருப்பதாகவும், பகுப்பாய்வின்போது,  அதில் இருந்து வெளிப்பட்ட வாயுவானது, பூமியில் உள்ள வளிமண்டல அமைப்பிலிருந்து வேறுபட்டது என்பதைக் காட்டுகிறது என்று குறிப்பிட்டுள்ளது. இந்த மண்ணின் தரம், தாங்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருப்பதாக தெரிவித்துள்ள ஆய்வாளர்கள்,  அங்குள்ள கனிமங்களில் இருந்து வெளியாகும் வாயுவையும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்ய உள்ளனர்.

More articles

Latest article