மக்கள் அனைவரும் தங்கள் கைவசம் வைத்திருக்கும் 500, 1000 நோட்டுக்களை அரசிடம் கொடுத்து புதிய நோட்டுக்களை மாற்றிக்கொண்டபின் ரிசர்வ் வங்கி தான் பெற்றுக்கொண்ட பழைய 500,1000 நோட்டுக்களை என்ன செய்யும் என்ற கேள்வி உங்கள் மனதில் தோன்றியதா? அதற்கு பதில் இதோ:

notes8

ரூபாய் நோட்டு தடை நடவடிக்கையால் கிட்டத்தட்ட 2000 கோடி எண்ணிக்கையிலான செல்லாத ரூபாய் தாள்கள் வந்து ரிசர்வ் வங்கியிடம் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரூபாய் தாள்கள் காகிதத்தை மிக நுண்ணிய துண்டுகளாக வெட்டி சிதைக்கும் இயந்திரங்களின் உதவியுடன் எளிதாக சிதைக்கப்படும். இந்தியா முழுவது ரிசர்வ் வங்கியிடம் 27 நோட்டுக்களை சிதைக்கும் அதிநவீன, பெரிய இயந்திரங்கள் இருப்பதாக தெரிகிறது.
இந்த நோட்டுக்களை சிதைக்கும் இயந்திரங்கள் பெரிய அறைகளில் வைக்கப்பட்டிருக்கும் அதில் வேலை செய்யும் மக்கள் தூசி மற்றும் பூஞ்சைகள் பாதிக்காதபடி முகமூடி அணிந்திருப்பர். சிதைக்கப்பட்ட காகித துண்டுகள் பின்னர் மொத்தமாக நிலத்தில் புதைக்கப்படும். என்று தெரிகிறது. இதற்கு முன்பு அந்த காகிதத் துண்டுகளை எரிக்கும் பழக்கமிருந்தது. இப்போது சுற்றுச்சூழல் நலனைக் கருதி அந்த காகிதத் துண்டுகள் நிலத்தில் புதைக்கப்படுகின்றன.
சாதாரண நாட்களில் வரும் நோட்டுக்கள் ஸ்கேனிங் இயந்திரங்கள் உதவியுடன் வேறுபிரிக்கப்படும் நல்ல நோட்டுக்கள் மறு சுற்றுக்கு விடப்படும், மிக மோசமான விதத்தில் சிதிலமடைந்த நோட்டுக்கள் சேர்த்து வைக்கப்பட்டு நோட்டுக்களை சிதைக்கும் இயந்திரங்களின் உதவியுடன் சிதைக்கப்படும்.
கடந்த 2015-16 ஆண்டில் ரிசர்வ் வங்கி 1600 கோடி எண்ணிக்கையிலான சிதிலமடைந்த நோட்டுகளை சிதைத்தது குறிப்பிடத்தக்கது.