சென்னை:
காலியாக உள்ள தமிழக பாஜக தலைவர் பதவியை நிரப்ப மேலும் கால தாமதம் ஏற்படும் என்று தமிழக பாஜக பொறுப்பாளர் முரளிதர்ராவ் தெரிவித்து உள்ளார்.
தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன், தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட் டதைத் தொடர்ந்து, மாநில பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து, கடந்த 15 நாட்களுக்கும் மேலாக மாநில தலைவர் பதவி காலியாக இருந்து வருகிறது.
மாநில தலைவர் பதவியை பிடிக்க பாஜக நிர்வாகிகள்இடையே கடுமையான போட்டிகள் நிலவி வருகிறது. இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசிய பொதுச் செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான முரளிதர் ராவ், தமிழக பாஜகவுக்கு தலைவர் நியமனம் அல்லது இடைக்கால தலைவர் நியமிப்பது தொடர்பாக தலைமைக்கு மேலும் அவகாசம் தேவைப்படுகிறது என்றார்.
அப்போது, ஏற்கனவே இருந்த முன்னாள் தலைவர் தமிழிசையின் பதவிக்காலம் டிசம்பர் 10ந்தேதி வரை இருக்கும் நிலையில், அதற்குள் மாநில தலைவர் நியமிக்கப்படுவாரா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்தவர், எந்த நேரத்திலும் அனைத்து மாநிலத் தலைவர்களையும் அறிவிக்கலாம் என்று கூறியவர், “நாங்கள் ஒரு இடைக்கால ஏன் நியமிக்க முடியாது என்று கேள்வி எழுப்பியவர், நாங்கள் எந்த நேரத்திலும் ஒரு மாநிலத் தலைவரை நியமிக்க முடியும் என்றார்.
”சாத்தியமான சிலரிடம் கேட்கப்பட்டது, ஆனால், அவர்கள் மறுத்துவிட்டனர், இதன்காரணமாக யார் தலைமை வகிப்பார்கள் என்பதில் மேலும் காலதாதம் ஏற்பட்டு உள்ளது என்று தெரிவித்தவர், புதிய கட்சித் தலைவர் அறிவிக்க இன்னும் 15-20 நாட்கள் ஆகும் என்று தோன்றுகிறது என்றார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த மாநில பாஜக நிர்வாகி ஒருவர், தமிழக பாஜக தலைவர் பதவிக்கான காலம் டிசம்பர் 10ந்தேதி வரை இருப்பதால், மாநிலதலைவர் நியமிக்க நேரம் உள்ளது என்று கூறினார்.
இதற்கிடையில், தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளதால், அதற்குள் கட்சியின் மாநிலத் தலைவர் நியமிக்கப்படுவார் என்று உன்ற எதிர்பார்ப்பு உள்ளது.