கோலாலம்பூர்:
லேசியாவில் உள்ள ஒரு பள்ளியில் திடீரென மாணவர்கள், வெறிபிடித்தவர்கள் போல நடந்துகொள்வது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த பள்ளியில் பேய் நடமாட்டம் இருப்பதுதான் இதற்குக் காரணம் என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.
மலேசியாவில் பசோ எனும் காட்டுப்பகுதி உள்ளது. இதன் அருகில் இருக்கும் பள்ளியில்தான், திடீரென மாணவர்களுக்கு வெறி பிடித்துவிடுகிறது.
அமைதியாக இருக்கும் மாணவர்கள், திடீரென ஆவேசமாகிறார்கள். தங்களைத் தாங்களே கீறிக்கொள்கிறார்கள். பிற மாணவர்களையும் மிருகங்களைப்போல தாக்குகிறார்கள். அருகில் இருக்கும் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் ஓடி பதுங்கிக்கொள்கிறார்கள்.
இதுபோன்று நடந்துகொள்ளும் மாணவர்கள், பிறகு இயல்பு நிலைக்கு வந்தவுடன், தங்களுக்கு எதுவும் நினைவில் இல்லை என்று தெரிவிக்கிறார்கள்.
கடந்த ஆகஸ்ட் மாதவாக்கில், சூனியக்காரி போல தோற்றமுள்ள ஒரு முதிய பெண்மணி  அந்த பகுதியில் சுற்றித் திரிந்ததாகவும், பிறகு அவரைக் காணவில்லை என்றும் தெரிவித்த பள்ளி நிர்வாகம் அதற்குப் பிறகுதான் மாணவர்கள் வெறிபிடித்தது போல நடந்துகொள்கிறார்கள் என்று தெரிவிக்கிறது.

"ஆவேசமான" மாணவன்... அவனை பிடித்து சாந்தப்படுத்தும் ஆசிரியர்கள்
ஆவேசமான” மாணவன்… அவனை பிடித்து சாந்தப்படுத்தும் ஆசிரியர்கள்

ஆனால் இந்த கருத்தை நம்பாத அரசு அதிகாரிகள், மாணவர்கள் உண்ணும் உணவில் ஏதும் பிரச்சினை இருக்கும் என்று தீர்மானித்தது. மாணவர்களின் உணவை தொடர்ந்து சோதித்து வந்தது. ஆனால் உணவில் எந்தவித பிரச்சினையும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
மாணவர்களுக்கு மட்டுமின்றி, சில ஆசிரியர்களும் திடீரென வெறிபிடித்தவர்களைப்போல நடந்துகொள்வதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த பாதிப்பால் மாணவர்களின் கல்வி, விளையாட்டுத்திறன் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக பள்ளி நிர்வாகம் தெரிவிக்கிறது.
அந்த பகுதியில் உள்ளவர்கள், குறிப்பிட்ட இந்த பள்ளியை “பேய் பள்ளி” என்று அழைக்க ஆரம்பித்துள்ளனர்.
பிரச்சினைக்குக்கான காரணம் தெரியாமல் பள்ளி நிர்வாகமும், அப்பகுதி அரசு பொறுப்பாளர்களும் குழம்பி வருகிறார்கள்.