டெஹ்ரான்: உலகளவில் வெறுப்புணர்வு அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளார் ஈரான் அதிபர் ஹசன் ரொஹானி.

அந்நாட்டின் முக்கிய அணு விஞ்ஞானியும், அந்நாட்டின் பாதுகாப்புப் படையில் முக்கியப் பொறுப்பு வகித்தவருமான பேராசிரியர் ஃபக்ரிஸதே, காரில் சென்றபோது, தலைநகர் டெஹ்ரானில் வைத்து மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டதையடுத்து இவ்வாறு கூறியுள்ளார் அதிபர்.

இந்த மரணம் ஈரானில் பெரிய அதிர்வை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்நாட்டு அரசின் சார்பில் ஏற்கனவே இஸ்ரேலின் மீது குற்றம் சாட்டப்பட்டது. தற்போது, அந்நாட்டு அதிபரின் வார்த்தைகள், அமெரிக்காவையும் சேர்த்து குற்றம் சாட்டுவதாக அரசியல் பார்வையாளர்களால் குறிப்பிடப்படுகிறது.

ஃபக்ரிஸாதே கொலை தொடர்பான விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. இதன்மூலம், ஈரான் – அமெரிக்கா உறவில் மேலும் சிக்கல் ஏற்படும் எனத் தெரிகிறது.