வெறுப்பை விதைத்தால் வெகுமதியாகும் வெற்றி: தேர்தலில் வெல்லும் வாய்ப்பு 30% அதிகம்.

Must read

Vaishnavi Rajmohan
Vaishnavi Rajmohan is a biotechnologist by profession and a rationalist by practice. Her writing interests include literature, social and scientific articles.

கடந்த 12 ஆண்டுகளில், நாடாளுமன்ற/சட்டமன்றத் தேர்தலில், வேட்பாளர் படிவத்தில் வேட்பாளர்கள் தாமாகவே பூர்த்தி செய்த விவரங்கள் அடிப்படையில் இந்தியா-ஸ்பெண்ட் (Indiaspend) எனும் பத்திரிக்கை செய்த ஆய்வில், அதிர்ச்சிகரத் தகவல் வெளியாகியுள்ளது.
துவேசப் பேச்சு பேசாத வேட்பாளர்களைவிட, துவேசப் பேச்சு பேசும் வேட்பாளர்கள் வெற்றி பெரும் வாய்ப்பு மூன்று மடங்கு அதிகம்.
  குற்றப்பிண்ண்ணி இல்லாத வேட்பாளர்களில் 10% பேர் வெற்றிப் பெருகின்றனர்.  குற்றப்பிண்ண்ணி உடைய வேட்பாளர்களில் 20% பேர் வெற்றிப் பெருகின்றனர்
குறைந்தது, 70 நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற உறுப்பினர்கள் மீது துவேசப் பேச்சு வழக்கு நிலுவையில் உள்ளது.
மோடியின் ஆட்சியின் கீழ், தேசியம், பேச்சு சுதந்திரத்தை கண்டித்து , மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், எம்.எல்.ஏ, எனப் பலரும் துவேசப் பேச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.
மோடியின் சகாக்களின் துவேசப் பேச்சின் சில துளிகள்:
hate1
ஹடெ2
ஹடெ5
 
ஹடெ7
 
ஹடெ8
 
ஹடெ9
ஹடெ999
ஹடெ9999
ஹடெ999999
 
தலைவன் எவ்வழி.. தொண்டன் அவ்வழி: பா.ஜ.க தலைவர்களும் விதிவிலக்கல்ல:
ஹடெ9999999
ஹடெ99999999
 
ஹடெ9999999999
முஸ்லிம் துவேசப் பேச்சு:
ஹடெ99
துவேசப் பேச்சு பாராளுமன்ற உறுப்பினர்கள் பட்டியலில் பா.ஜ.க முதலிடம்:
கடந்த 12 ஆண்டுகளில், 399 வேட்பாளர்கள் துவேசப் பேச்சு வழக்குடன் தேர்தலில் போட்டியிட்டு உள்ளனர். அதில் பா.ஜ.க. அதிகப் பட்சமாக 97 வேட்பாளர்களை களமிறக்கிவிட்டுள்ளது. காங்கிரஸ் 28 வேட்பாளர்களை களமிறக்கி மூன்றாவது இடத்தில் உள்ளது.ஹடெ0
துவேசப் பேச்சு  சட்டம் :
இன்னும் துவேசப் பேச்சு குறித்து மிகச்சரியாக வரையறுக்கப் பட வில்லை எனினும், கீழ்கண்டவை சில பிரிவுகள் ஆகும்.

  • 153 (ஏ)-, வகுப்புவாத இன, மொழி, இன மற்றும் வம்சாவளியை தொடர்பான பகை உருவாக்கும் நோக்கில் பேசுதல்.
  • 153 (பி)- இறையாண்மைக்கு எதிராக அறிக்கைகள்;
  • 295 (ஏ)– மத உணர்வுகளை காயப்படுத்தும் நோக்கில் விடப்படும் அறிக்கைகள்;
  • 505 (2)-  வகுப்புகளுக்கு இடையே வெறுப்பு, பகை வளர்க்கும் அல்லது தவறான நோக்கில் கூறப்படும் கருத்துக்கள்.
  • மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 125:  தேர்தல்சமயத்தில், வகுப்புகள் இடையே பகையை வளர்த்தல்.

 “சமத்துவம், மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயகம்” ஆகிய மூன்று கொள்கைகளைப் கடுமையாக பின்பற்றுவதாக சத்யப்பிரமாணம் செய்துக் கொடுத்து தான் தேர்தல் ஆணையத்தில் கட்சிகள் தங்களைப் பதிவு செய்கின்றனர்.
துவேசப் பேச்சு” வழக்குகள் கொண்ட வேட்பாளர்களுக்கு தேர்தலில் சீட்டு கொடுப்பதன் மூலம், ஒரு வகையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் ஆணையத்தில் தாங்கள் சுயஆணையிட்டுக் சமர்ப்பித்த வாக்குறுதியிலிருந்து தடம் புரள்கின்றன. இதனை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாமல் இருப்பது தான், வேதனைக்குரிய விசயமாகும்.
மாற்றம், வளர்ச்சி எங்கிற கவர்ச்சிகரமான வாசகங்கள்  மூலம் மக்களின் வாக்குகளை ஈர்த்து ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த நரேந்திர மோடி, இதுவரை இத்தகைய துவேசப் பேச்சு அமைச்சர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதில் ஆச்சர்யம் ஆச்சர்யம் ஏதும் இல்லை.

More articles

Latest article