கேப்டவுன்: உலகக்கோப்பை போட்டிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள தென்ஆப்ரிக்க கிரிக்கெட் அணியில், ஆல்-ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் நீக்கப்பட்டு, ஃபார்மில் இல்லாத ஹஷிம் ஆம்லா சேர்க்கப்பட்டுள்ளது விவாதங்களை கிளப்பியுள்ளது.

சிறந்த ஓபனிங் பேட்ஸ்மேன் என அறியப்பட்ட ஹஷிம் ஆம்லா, கடந்த ஓராண்டாகவே, அனைத்துவிதமான போட்டிகளிலும் ஃபார்ம் இன்றி காணப்படுகிறார். மொத்தம் 16 இன்னிங்ஸ்கள் ஆடி, ஒரு சதம் மட்டுமே அடித்துள்ளார். கடந்த 2018ம் ஆண்டின் இவரது சராசரி வெறும் 35.26% மட்டுமே.

கிறிஸ் மோரிஸ் தேர்வுசெய்யப்படாத நிலையில், டிவைனே பிரிடோரியஸ் மற்றும் ஆன்டிலே ஃபெலுக்வியோ ஆகியோர் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். மேலும், வேகப்பந்து வீச்சாளர்களான லுங்கி ஜிடி மற்றும் ஆண்ட்ரிச் நார்ட்ஜே ஆகியோரும் தேர்வு பெற்றுள்ளனர்.

உலகக்கோப்பை அணி விபரம்

ஃபஃப் டு பிளெஸ்ஸி (கேப்டன்)

கிவின்டன் டி காக்

ஹஷிம் ஆம்லா

டேவிட் மில்லர்

ஜேபி டுமினி

எய்டன் மார்க்ரம்

ரஸி வான்டெர் டுஸென்

டிவைனே பிரிடோரியஸ்

ஆன்டிலே ஃபெலுக்வியோ

காகிஸோ ரபடா

டேல் ஸ்டெய்ன்

லுங்கி ஜிடி

ஆன்ரிச் நார்ட்ஜே

இம்ரான் தாஹிர்

தப்ரெய்ஸ் ஷாம்ஸி

ஆகியோர்தான் உலகக்கோப்பையில் களம் காண உள்ளனர்.

 

– மதுரை மாயாண்டி