கொரோனா இரண்டாவது அலையின் தீவிரத்தாலும், ஊரடங்கு தொடர்வதாலும் திரையரங்குகள் இன்னும் திறக்கப்படவில்லை.
இதனால் சில பெரிய பட்ஜெட் திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் நேரடி ஓடிடி வெளியீடை பரிசீலித்து வருவதாகத் தெரிகிறது.
தொடர்ந்து பட வெளியீடுகள் தள்ளிப்போவது தயாரிப்பாளர்களுக்கு நிதி நெருக்கடியை உருவாக்கியுள்ளது .
இந்நிலையில் டாப்ஸி நடித்திருக்கும் இந்திப் படம் ஹசீனா தில்ரூபா நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது. ஜுலை 2-ம் தேதி நெட்பிளிக்ஸில் ரசிகர்கள் இந்தப் படத்தைப் பார்க்கலாம்.
ஹசீனா தில்ரூபா ஒரு த்ரில்லர் திரைப்படம். வினில் மேத்யூ படத்தை இயக்க, ஆனந்த் எல்.ராய், ஹிமன்ஸு சர்மா, பூஷன் குமார், கிருஷ்ணன் குமார் ஆகியோர் இணைந்து படத்தை தயாரித்துள்ளனர். தாப்ஸியுடன் ஹர்ஷ்வர்தன் ரானே நடித்துள்ளார்.