பஞ்சகுலா
பலாத்கார வழக்கில் சாமியார் ராம் ரஹிம் தண்டனை பெற்றதும் கலவரம் நடத்த ரூ.1.25 கோடி பணம் அவருடைய வளர்ப்பு மகள் அளித்துள்ளார் என போலீசார் அறிவித்துள்ளனர்.
தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவரான சாமியார் ராம் ரஹீம் பலாத்கார வழக்கில் 20 வருட தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சிறையில் அடைக்கப்பட்டதும் அரியானா, பஞ்சாப் மாநிலங்களில் கடும் கலவரம் வெடித்து 36 பேர் மரணமடைந்தனர். பல பொதுச் சொத்துக்கள் பாழக்கப்பட்டது. அந்த கலவரத்தை தூண்டி விட்டதாக சாமியாரின் வளர்ப்பு மகள் எனக் கூறப்படும் ஹனிபிரீத் மீது குற்றம் சாட்டப்பட்டது.
ஹனி பிரீத் திடீரெஜ தலைமறைவானார். அவரை நாடெங்கும் போலீசார் தேடி வந்தனர். அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி போலீசார் ஹனி பிரீத்தை கைது செய்தனர். ஏற்கனவே இந்த கலவர வழக்கில் ராம் ரஹீமின் கார் டிரைவர் ராகேஷ் குமார் என்பவரை செப்டம்பர் 27ல் கைது செய்தனர். அவர் தனது வாக்குமூலத்தில், சாமியார் கைது செய்யப்பட்டால் வன்முறையைத் தூண்ட வேண்டும் என ஹனிபிரீத் ரூ. 1.25 கோடி ரூபாயை தேரா சச்சா சவுதாவின் பஞ்சகுலா மாவட்ட தலைவர் சம்கவுர் சிங்கிடம் கொடுத்ததாக சொல்லி உள்ளதாக அரியானா போலீசார் கூறி உள்ளனர்.