ண்டிகர்

ரியானாவில் காவலர் தேர்வுக்கான உடல் தகுதியை குறைக்க காவல்துறை அளித்த சிபாரிசை அமைச்சரவை ஒப்புக் கொண்டுள்ளது.

அரியானா மாநிலத்தில் காவல்துறையில் சேர உடல் தகுதி ஜாட் இனத்தை சேர்ந்த மக்கள் நல்ல உடற்கட்டுடன் இருப்பதை மனதில் கொண்டு அமைக்கப் பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.   இதனால் மற்ற வகுப்புக்களை சேர்ந்தவர்களால் காவல்துறையில் பணி புரிய வாய்ப்பு கிட்டுவதில்லை என சொல்லப்பட்டது.

இதைத் தொடர்ந்து அரியானா மாநில காவல்துறை இந்த உடல் தகுதியை தற்போது குறைத்துள்ளது.  முன்பு குறைந்த பட்ச உயரமாக 176.4 செண்டிமீட்டர் இருந்தது,  தற்போது இது 170 செண்டிமீட்டராக குறைப்பட்டுள்ளது.   அதே போல மார்பளவு விரிவடைந்த நிலையில் 34.5 இஞ்ச் என்பது குறைந்த பட்ச தகுதியாக இருந்தது.  தற்போது அது 32.6 இஞ்ச் ஆக குறைக்கப்பட்டுள்ளது.  அதே போல பெண்களுக்கும் உடல் தகுதி குறைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய தகுதிகளுக்கு மனோகர் கட்டர் தலைமையிலான பாஜக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.   அதன் மூலம் அனைத்து மக்களுக்கும் காவல்துறையில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும் என அரசு தெரிவித்துள்ளது.   இவ்வாறு மாற்றப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளது.   இவ்வளவு நாள் கழித்து இப்போது இந்த மாற்றத்தை அரசு கொண்டு வந்ததற்கு விரைவில் வரவுள்ள தேர்தலே காரணம் என காங்கிரஸ் கட்சி கூறி உள்ளது.