அரியானா:

னக்கு அரியானா அரசு வழங்குவதாகக் கூறிய பரிசுத் தொகையினை  இன்னும் வழங்கவில்லை என  மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் வேதனை தெரிவித்துள்ளார்.

கடந்தாண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் சிறப்பாக விளையாடி, இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கத்தை பெற்றுத்தந்தவர் சாக்‌ஷி மாலிக்.

இவர் வெண்கலப் பதக்கம் பெற்றதை தொடர்ந்து அவருக்கு ஹரியானா அரசு பரிசு தொகை அறிவித்தது.

ரியோ ஒலிம்பிக் 58 கிலோ எடை பிரிவிலான பெண்கள் மல்யுத்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக் தன்னுடன் மோதிய மங்கோலிய வீராங்கனை ஒர்ஹான் புர்வித்ஜ் -ஐ 12-3 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்து வெண்கலப் பதக்கத்தை பெற்றார்.

இதையடுத்து ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா தனது முதல் பதக்கத்தை பதிவு செய்தார். அதைத் தொடர்ந்து அவருக்கு அரியானாஅரசு 3 கோடி பரிசு அளிப்பதாக அறிவித்தது.

ஆனால், இதுவரை அவருக்கு கொடுப்பதாக அறிவித்த பணத்தை அரசு வழங்கவில்லை என்று வேதனையாக தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று நான் எனது வாக்குறுதியை காப்பாற்றி விட்டேன். ஆனால், எனக்கு பரிசளிப்பதாகக் கூறிய அரியானா அரசு எப்போது தன்னுடைய வாக்குறுதியை காப்பாற்றப் போகிறது? அரியானா அரசு அளித்த வாக்குறுதியெல்லாம் வெறும் ஊடகங்களுக்காக மட்டும் தானா?

என்று கூறியுள்ளார்.

இது அரியானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.