அரியானா சட்டமன்ற தேர்தல்! காலை 10மணி நிலவரப்படி 8.92% வாக்குப்பதிவு

Must read

சண்டிகர்:

ரியானா மாநில சட்டமன்ற தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநில முதல்வர்  மனோகர்லால் கத்தார் சைக்கிளில் வந்து தனது வாக்கை செலுத்தினார்.

90 தொகுதிகளை கொண்டுள்ள அரியானா மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பாஜக, காங்கிரஸ், இந்திய தேசிய லோக் தள், ஜனநாயக் ஜனதா கட்சி, ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட கட்சிகள் களமிறங்கியிருப்பதால், பலமுனை போட்டி உருவாகியிருக்கிறது. ஆயிரத்து 169 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இங்கு முதன்முறையாக  ஜனநாயக் ஜனதா கட்சி களத்தில் இறங்கி உள்ளது. அங்கு மும்முனை போட்டி நிலவி வருவதால், வெற்றிபெறப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவி வருகிறது.

ஜனநாயக் ஜனதா கட்சியின் தலைவர் துஷ்யந்த் செளதாலா மற்றும் அவரது குடும்பத்தினர், டிராக்டரில் மூலம் வந்து, சிர்சாவில் உள்ள வாக்குச்சாவடியொன்றில் வாக்களித்தனர்.

அதுபோல தற்போதைய பாஜக முதல்வர் மனோகர்லால் கத்தார், இருசக்கர வாகனத்தில் தனது ஆதரவாளர்களுடன் வந்து ஜனநாயக கடமையாற்றினார்.

அங்கு காலை 10 மணி நிலவரப்படி  8.92% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

More articles

Latest article