ஹர்ஷத் மேத்தா மனைவி மற்றும் தம்பிக்கு வருமான வரித்துறை விதித்த ரூ. 2 ஆயிரம் கோடி வரி ரத்து : மேல்முறையீட்டு தீர்ப்பாயம் தீர்ப்பு

Must read

 

மும்பை:

ஹவாலா மோசடி மன்னன் ஹர்ஷத் மேத்தாவின் மனைவி மற்றும் தம்பி ஆகியோருக்கு வருமான வரித்துறை விதித்த ரூ. 2 ஆயிரம் கோடி வரி விதிப்பை , வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் ரத்து செய்துள்ளது.

வங்கிகள் மூலம் கடன் பெற்றுத் தரும் புரோக்கராக செயல்பட்ட ஹர்ஷத் மேத்தா,
வங்கிகளை ஏமாற்றி, ரூ. 4 ஆயிரம் கோடி வரை ஹவாலா முறையில் மோசடி செய்த தாக குற்றச்சாட்டு எழுந்தது.

பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் ,ஹர்ஷத் மேத்தா மீது 74 கிரிமினல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
இந்த வழக்கில் தண்டனை பெற்ற ஹர்ஷத் மேத்தா,கடந்த 2001-ம் ஆண்டு தனது 44 வயதில் காலமானார்.

இந்நிலையில், கடந்த 1992-ல் பல்வேறு பரிவர்த்தனைகளின்படி, ஹர்ஷத் மேத்தா, அவரது மனைவி ஜோதி, தம்பி அஸ்வின் ஆகியோர் ரூ.2 ஆயிரம் கோடி வருமான வரி கட்ட வருமான வரித்துறை உத்தரவிட்டது.

இதை எதிர்த்து
வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் ஜோதி, அஸ்வின் ஆகியோர் அப்பீல் செய்தனர்.

வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், 2 ஆயிரம் கோடி வருமான வரி கட்ட வருமான வரித்துறை உத்தரவிட்டதை ரத்து செய்தது.

 

 

More articles

Latest article