மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை அவசரகதியில், ஜனாதிபதி ஆட்சியை உத்தரக்காண்டில் அமல் படுத்தியதை நிறுத்தி வைத்து, பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க ஹரிஷ் ராவத் அரசுக்கு அவகாசம் வழங்கும் விதமாக, வருகின்ற வியாழனன்று சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு வழங்கி உத்தரவிட்டது.
இதனை வரவேற்ற ஹரிஷ் ராவத் , இது இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வளைக்கப் பார்த்த பா.ஜ.க.வினருக்கு சவுக்கடியாகும் என தெரிவித்தார்.
“கண்டிப்பாக நம்பிக்கை வாக்கெடுப்பில் வெல்வோம்” என்றார் உறுதியுடன்.
தொடர்புடைய பதிவு : உயர் நீதிமன்றம் உத்தரவு