ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது மர்மமான முறையில் உயிரிழந்திருக்கும் நிகழ்வை அனைத்து அரசியல் கட்சிகளும், திரையுலகினரும் , பொது மக்களும் கண்டித்துள்ளன.
இந்நிலையில் இயக்குநர் ஹரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் :
“சாத்தான்குளம் சம்பவம் போல் இனி ஒரு கொடூரம் தமிழக மக்களுக்கு நடந்துவிடக்கூடாது. அதற்கு ஒரே வழி சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்குவதே. காவல்துறையில் உள்ள சிலரின் இந்த அத்துமீறல் அந்தத் துறையையே இன்று களங்கப்படுத்தியுள்ளது. காவல்துறையை பெருமைப்படுத்தி ஐந்து படங்கள் எடுத்ததற்காக இன்று மிகவும் வேதனைப்படுகிறேன்”.என பதிவிட்டுள்ளார் .
‘சாமி’, ‘சிங்கம்’, ‘சிங்கம் 2’, ‘சிங்கம் 3’, ‘சாமி ஸ்கொயர்’ எனக் காவல்துறையை மையமாக வைத்துப் படம் இயக்கியுள்ளார் ஹரி என்பது குறிப்பிடத்தக்கது .