கமதாபாத்

டேல் இனத் தலைவர் ஹர்திக் படேலுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

படேல் இன அமைப்பான படிதார் அனமத் அந்தோலன் சமிதி (பாஸ்) தலைவரான ஹர்திக் படேல் சமீபத்தில் காங்கிரசுக்கு தனது ஆதரவை அளித்துள்ளார்.  அத்துடன் குஜராத் மாநிலம் முழுவதும் தேர்தல் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.  அரசியல் பிரமுகர்களின் பாதுகாப்பை ஆராய்ந்து வரும் இந்தியப் புலனாய்வுத் துறை ஹர்திக் படேலுக்கு பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தெரிவித்தது.

அதை ஒட்டி ஹர்திக் படேலுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பை மத்திய அரசு வழங்கி உள்ளது.  இது குறித்து ஹர்திக், “நான் ஒய்+ பாதுகாப்பை ஏற்றுக் கொண்டுள்ளேன்.  அதில் இரண்டு யூனிட்டுக்கள் இந்திய பாதுகாப்புப் படக் காவலர்கள் என்னை நாள் முழுவதும் பாதுகாப்பார்கள்.  எனக்கு மாநில காவல்துறையின் மீது நம்பிக்கை இல்லை.  ஆனால் இந்தியப் பாதுகாவலர்கள் மீது முழு நம்பிக்கை உண்டு” என தெரிவித்துள்ளார்.