கமதாபாத்

டேல் இன தலைவர் ஹர்திக் படேல் வரும் 27 ஆம் தேதி தனது சிறு வயஹ்டு தோழியை திருமனம் செய்கிறார்.

ஹர்திக் படேல் குஜராத் மாநிலம் விராம் காம் பகுதியை சேர்ந்தவர்.   இவர் படேல் இனத்தவர் இட ஒதுக்கீட்டுக்காக போராடி வருகிறார்.   இவர் படிதார் அனன்மத் அந்தோலன் சமிதி என்னும் அமைப்பின் தலைவர் ஆவர்.  இவர் படேல் இனத்தவருக்கு இடஒதுக்கிடு மற்றும் விவசாயக் கடன் தள்ளுபடி ஆகிய கோரிக்கைகளுக்காக உண்ணாவிரத போராட்டம் நடத்தி உள்ளார்.

ஹர்திக் படேல் சிறு வயதில் இருந்தே அகமதாபாத் அருகே உள்ள சண்டனகரி என்னும் கிராமத்தில் வசித்து வந்தனர்.    இவருடைய வீட்டின் அருகே இவரது சிறு வயது தோழியான கிஞ்சல் பரிக் வசித்து வந்தார்.    இவர்கள் இருவரும் வரும் 27 ஆம் தேதி திருமணம் செய்துக் கொள்கின்றனர்.

ஹரிதிக் தந்தை பாரத் படேல் இந்த திருமணம் அவர்களின் குல தெய்வக் கோவில்களான பஹூர் மற்றும் மெல்டி மெகதாவில் நடைபெறும் என அறிவித்துள்ளார்.  திருமணத்துக்கு பிறகு ஹர்திக் படேல் தனது மனைவி கிஞ்சல் உடன் தனது சொந்த ஊரான விராம்காம் இல் வசிப்பார் என கூறப்படுகிறது.