ஹர்திக் பாண்டியா, ஷுப்மென் கில், ரஷீத் கான் ஆகியோர் அகமதாபாத் ஐ.பி.எல். அணிக்காக விளையாட இருக்கிறார்கள்…

Must read

லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய இரண்டு புதிய ஐ.பி.எல். அணிகள் வரும் சீசன் முதல் பங்கேற்க இருக்கின்றன.

அகமதாபாத் அணியின் உரிமையாளராக சி.வி.சி. கேப்பிடல் நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இவ்விரு அணிகளில் இடம்பெறும் வீரர்கள் முடிவு செய்யப்பட்டுள்ளது, இதில் இறுதி பட்டியலை வெளியிட இம்மாதம் 22 ம் தேதி கடைசி நாள்.

தற்போது அகமதாபாத் அணியில் இடம்பெற்றிருக்கும் வீரர்கள் பற்றிய விவரம் கசிந்திருக்கிறது, ஹர்திக் பாண்டியா, ஷுப்மென் கில், ரஷீத் கான் ஆகியோர் இந்த அணிக்காக விளாயாட இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் பயிற்சியாளர்களாக முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா, தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன் கேரி கிரிஸ்டன் மற்றும் இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன் விக்ரம் சோலங்கி ஆகியோர் நியமிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.

இதுகுறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு தினங்களில் வெளியாகும் போது லக்னோ அணியில் இடம்பெறும் வீரர்கள் குறித்தும் முழு விவரம் தெரியவரும்.

More articles

Latest article