உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் ஏப்ரல் இறுதியில் தொடங்கும் மாட்ரிட் ஓபனில் பங்கேற்க ஸ்பெயின் நாட்டின் சுகாதார விதிகளுக்கு இணங்க வேண்டும் என்று ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் அறிவித்துள்ளார்.

ஜோகோவிச்சை ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேற்றும் முடிவை வரவேற்பதாக கூறிய சான்செஸ் ஆஸ்திரேலியாவின் கட்டுப்பாட்டு நடவடிக்கையை வெகுவாகப் பாராட்டினார்.

ஸ்பெயின் நாட்டிற்குள் நுழைவதற்கு முழுமையாக இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான ஆதாரம் வேண்டும் என்றும், நாட்டிற்குள் நுழைவதற்கு 72 மணி நேரத்திற்குள் எடுத்த PCR எதிர்மறை சோதனை அல்லது கோவிட் தொற்றில் இருந்து மீண்டதற்கான சான்றையும் அளிக்க வேண்டும் என்றும் அந்நாட்டு சுகாதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஸ்பெயினில் நடைபெறும் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு தினசரி அடிப்படையில் கோவிட் பரிசோதனை மேற்கொள்ளும் விதிகயை கூடுதலாக சேர்க்க இருப்பதாக மூத்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.