மும்பை: இந்தியா வரவுள்ள தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆடும் இந்திய அணியில், ஷிகர் தவான் மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
காயம் காரணமாக இவர்கள் சில தொடர்களில் பங்கேற்பதிலிருந்து விலகியிருந்தார்கள். தற்போது காயம் குணமடைந்த நிலையில் களமிறங்கவுள்ளனர். மேலும், புவனேஷ்வர் குமாரும் களமிறங்குகிறார்.
இந்தியாவில் மொத்தம் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது தென்னாப்பிரிக்க அணி. முதல் போட்டி, மார்ச் 12ம் தேதி தர்மசாலாவில் நடைபெறுகிறது.
இரண்டாவது போட்டி, மார்ச் 15ம் தேதி லக்னோவிலும், மூன்றாவது மற்றும் இறுதிப் போட்டி கொல்கத்தாவில் மார்ச் 18ம் தேதியும் நடைபெறுகின்றன.
ஒருநாள் தொடரில் இடம்பெற்றுள்ள இந்திய அணி வீரர்களின் விபரம்: விராத் கோலி(கேப்டன்), ஷிகர் தவான், பிரித்வி ஷா, லோகேஷ் ராகுல், மணிஷ் பாண்டே, ஷ்ரேயாஸ், ரிஷ்ப் பன்ட், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், யஸ்வேந்திர சஹல், ஜஸ்ப்ரிட் பும்ரா, நவ்தீப் சைனி, குல்தீப் யாதவ் மற்றும் சுப்மன் கில்.