நியூசிலாந்தைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவில் ஆங்கில புத்தாண்டு கோலாகலமாக பிறந்தது. வண்ண வண்ண வான வேடிக்கைகளுடன், மக்கள் கொண்டாட கோலாகலமாக புத்தாண்டு பிறந்தது
உலகிலேயே முதலில் பசிபிக் கடலில் உள்ள கிறிஸ்துமஸ் தீவு என்ற கிரிபேட்டியில் இன்று மதியம் 3.30 மணிக்கு புத்தாண்டு பிறந்தது. அதைத் தொடர்ந்து நியூசிலாந்தில் 2024 வருட ஆங்கில புத்தாண்டு பிறந்தது. இந்திய நேரப்படி சரியாக இன்று மாலை 4.30 மணியளவில் புத்தாண்டு பிறந்தது. புத்தாண்டை நியூசிலாந்து மக்கள் வாணவேடிக்கை மற்றும் பட்டாசுகள் வெடித்தும், கேக் வெட்டி, ஆட்டம் பாட்டம் வரவேற்றனர்.
அதைத்தொடர்ந்து, இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 மணிக்கு ஆஸ்திரேலியாவில் புத்தாண்டு பிறந்தது. புத்தாண்டையொட்டி, ஆஸ்திரேலியாவில் பிரமாண்டமான வாண வேடிக்கை நடைபெற்றது. பல்வேறு வண்ணங்கள் வெடி வெடிக்கப்பட்டு, புத்தாண்டை ஆஸ்திரேலிய மக்கள் வரவேற்றனர். தொடர்ந்து பல இடங்களில் பொதுமக்கள் வேக் வெட்டியும், ஆலயங்களில் பிரார்த்தனை செய்தும் கொண்டாடி வருகின்றனர்.