புத்தாண்டே வருக!!!!!
பா. தேவிமயில் குமார்

உழைப்பு மட்டுமே
உயர்வென ஆகட்டும்!!!
ஆரோக்கியம் நம்மை
ஆளட்டும்!!
தைரியம் நம்மை
தொற்றிக் கொள்ளட்டும்!!!!
செல்லும் வழியெங்கும்
சாலைகள் நீளட்டும்!!!!
வாய்ப்புகள் நம்
வாசல் தேடி வரட்டும்!!!
இயற்கை தன்
இரக்கத்தினை கொடுக்கட்டும்!!!
தொட்டதெல்லாம்
துலங்கிடட்டும்!!!!
புத்தாண்டு சபதம்
புத்துணர்வோடு இருக்கட்டும்!!!!
மகிழ்ச்சியின் கிரணங்கள்
மாலையாகட்டும்!!!!!
எண்ணிய எண்ணங்கள்
எல்லாமே ஈடேறட்டும்!
மகிழ்ச்சி இங்கே
பொதுவுடமை ஆகட்டும்!!!!
வருக புத்தாண்டே
வரவேற்கிறோம் உம்மை மங்கள இசையோடு!!!!
வாழ்த்தி செல் எங்களை
வருடமெல்லாம்!!!!!