நடிகை ஹன்சிகா பற்றி கடந்த சில தினங்களாக திருமண கிசுகிசு பரவி வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் யூடியூப் சேனல் ஆரம்பிக்க உள்ளதாக ஹன்சிகா தெரிவித்தார். அவரது திரையுலக விஷயங்கள் பற்றி அதில் வெளி யிட முடிவு செய்தார்.
இந்நிலையில் ஹன்சிகா நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு மும்பை தொழில் அதிபர் ஒருவரை திருமணம் செய்ய உள்ளதாக தகவல் பரவியது. இதுகுறித்து அவரது தோழிகள் ஹன்சிகாவை தொடர்புகொண்டு கேட்டனர்.
இதுகுறித்து ஹன்சிகா தனது இணைய தள பக்கத்தில் அளித்த விளக்கத்தில் ’ திருமணமா எனக்கா, யாருடன்? ரப்பிஷ் . அட கவுளே யார் அவர்? என கேட்டிருக்கிறார்.
ஹன்சிகா தற்போது தனது 50வது படமாக சிம்புடன் இணைந்து மஹா படத்தில் நடித்திருக்கிறார்.கோவி 19 ஊரடங்கால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருக்கிறது.
#