ஹன்சிகா மோத்வானியின் 50-வது திரைப்படம் மஹா. அதை தொடர்ந்து ஒரு சாதனை திரைப்படத்தில் ஹன்சிகா ஒப்பந்தமாகியுள்ளார். ஒரே ஷாட்டில் இந்தத் திரைப்படம் எடுக்கப்பட உள்ளது.

இந்த படத்திற்கு 105 மினிட்ஸ் என்று பெயர் வைத்துள்ளனர். படத்துக்கு 105 மினிட்ஸ் என்று பெயர் வைத்துள்ளனர். ஹன்சிகா மட்டுமே இதில் நடிக்கிறார். ஒரே ஷாட், ஒரே நடிகை, தெலுங்கில் தயாராகும் இந்தப் படத்தை ராஜா துஷா இயக்குகிறார். சைக்கலாஜிகல் த்ரில்லராக இப்படம் தயாராகிறது.

ஒரே ஷாட்டில் இதுவரை உலகம் முழுவதும் நாற்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. தமிழில் அப்படி ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம், அகடம். 2015-ல் வெளியான ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட ஸ்பானிஷ் திரைப்படம் விக்டோரியா 17 சர்வதேச விருதுகளை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது .

 

[youtube-feed feed=1]