டில்லி

கைகளால் தூக்கி எறிந்து பீரங்கிகளை தாக்கி அழிக்கும் ஏவுகனை சோதனை வெற்றிகரமாக நடந்துள்ளது.

File picture

இந்திய ராணுவத்தில் பல புதிய ஏவுகணைகளை அறிமுகப்படுத்தும் திட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.   ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேமபாட்டு மையமான டி ஆர் டி ஓ பல நவீன ஏவுகணைகளை கண்டறிந்து சோதித்து வருகிறது.   அவ்வகையில் நேற்று கையெறி ஏவுகணை ஒன்றை டி ஆர் டி ஓ வெற்றிகரமாக சோதித்துள்ளது.

இந்த கையால் தூக்கி எறிந்து பீரங்கிகளை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்துள்ளது.  டி ஆர் டி ஓ அதிகாரிகள் இது குறித்து, “இது இந்தியாவின் ஏவுகணை திட்டத்தில் ஒரு மிகப்பெரிய வெற்றியாகும். விரைவில் இந்த ஏவுகணை ராணுவத்தில் சேர்க்கப்பட உள்ளது. இத்தகைய ஏவுகணைகளை போர்க் காலங்களில் கையால் துாக்கிச் சென்று, இலக்கை நோக்கி தாக்கி அழித்திட முடியும். தற்சார்பு இந்தியா இயக்கத்துக்கு இது வலு சேர்த்துள்ளது’ என்றனர்

நேற்று தரையில் இருந்து பாய்ந்து சென்று விண்ணில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் ஆகாஷ் ஏவுகணை சோதனையும் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.   இந்த சோதனைகள் ஒடிசா மாநிலத்தில் அமைந்துள்ள பாலசோரில் உல்ள தளத்தில் இருந்து நடத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.