டெல்லி:

பெண்கள் தினத்தை முன்னிட்டு, தனது சமூக ஊடகக் கணக்கை பெண்களுக்கு வழங்கப்போவதாக பிரதமர் மோடி அறிவித்திருந்த நிலையில்,  அந்த கணக்கை,  உன்னாவ் பாலியல் வன்புணர்வால் பாதிக்கப்பட்ட  பெண்ணிடம் ஒப்படையுங்கள்  பிரதமருக்கு காங்கிரஸ் யோசனை தெரிவித்து உள்ளது.

சமூக வலைதள கணக்குகளில் இருந்து வெளியேறப்போவதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி அறிவித்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பின்னர், மாா்ச் 8ந்தேதி சா்வதேச மகளிா் தினத்தன்று தனது சமுக வலைதள கணக்குகளை நிர்வகிக்க பெண்க ளுக்கு வாய்ப்பு வழங்கப்போவதாகவும், ‘நமக்கு முன்னுதாரணமாக இருக்கும் வகையில் வாழும், செயலாற்றும் பெண்களுக்கு எனது சமூக ஊடகக் கணக்குகளை விட்டுத்தர இருக்கிறேன்’  அதற்கான நபரை தேடி வருவதாகவும் கூறியிருந்தார்.

இந்த நிலையில்  காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுஷ்மிதா தேவ், மோடிக்கு ஆலோசனை தெரிவித்து உள்ளார்பிரதமர் நரேந்திர மோடி, உன்னாவில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட பெண்ணிடம் சமூக ஊடகக் கணக்குகளைக் கொடுக்கலாம். அப்போதுதான்…  அவர் தனக்கு நிகழ்ந்த கொடுமைகளை பகிர்ந்து கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார்.