சென்னை: தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு எழுதுபவர்களுக்கு இன்று பிற்பகல் இணையதளத்தில் ஹால் டிக்கெட் வெளியாகிறது. இதை அரசு தேர்வுத்துறை அறிவித்து உள்ளது.

தமிழகத்தில், கடந்த மே மாதம் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டு, ஜூன் 20ஆம் தேதி முடிவுகள் வெளியிடப்பட்டன.  தமிழகம், புதுச்சேரியில் 93.76% மாணவ, மாணவிகள் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தனர். 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 8,06,277 பேரில் 7,55,998 மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர்.

இந்த தேர்வை எழுத தவறியவர்கள், தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூலை 25ந்தேதி துணைத்தேர்வு நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கு இன்று ஹால்டிக்கெட் வெளியிடுவதாக அரசு தேர்வுத்துறை தெரிவித்து உள்ளது.

12ஆம் வகுப்பு துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் அதற்கான ஹால் டிக்கெட்டுகளை https://dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

[youtube-feed feed=1]