உலக மக்கள் தொகையான ஏழு பில்லியன் மக்களுக்கும் உணவளிக்க போதுமான அளவு உணவு உற்பத்தி உலகில் தயாரிக்கப்படுகின்றது.இருப்பினும், இன்னும் ஒன்பதில் ஒரு நபர் பட்டினி கிடக்க நேரிடுகின்றது.
ஹைட்டி, வட அமெரிக்காவில் உள்ள ஒரு கரீபியன் நாடாகும். ஹிஸ்பனியோல் தீவில் அமைந்துள்ள ஹைட்டிக்கு கிழக்கே டோமினிகன் குடியரசு உள்ளது.
ஹைட்டி மேலை உலகிலேயே மிக வறிய நாடுகளில் ஒன்று. இங்கு 2010 ஏற்பட்ட பூகம்பத்தால் பஞ்சம் நிலவி வருகின்றது. அம்மக்கள் வறுமையில் வாடிவருகின்றனர்.
கீழே உள்ள காணொளியில், ஹைட்டியர்கள் மண் தட்டுகள் செய்கின்றனர்.
இதில் என்ன இருக்கின்றது என நினைக்கின்றீர்களா ?
நீங்கள் நினைப்பது போல் ஹைட்டியர்கள் மண் தட்டு செய்வது அதில் உணவை வைத்துச் சாப்பிட அல்ல. அதனையே உணவாய் சாப்பிட. ஆம். பாருங்கள் காணொளியை:
சில குறிப்புகள்:
அவசியம் படிக்க: உணவு வீணாவதற்கு காரணம் யார் ? உலக பொருளாதாரக் கொள்கைகளா? தனிநபர் அலட்சியமா?
நன்றி: இந்தியாடுடே