சேலம்:

சேலம் வாழப்பாடி அருகே நேற்று  ஐஸ் கட்டி மழை கொட்டியது.  ஒவ்வொரு துளியும் பெரிய பெரிய ஐஸ்கட்டி களாக விழுந்து பயிர்களை சேதப்படுத்தியது. இந்த ஐஸ் கட்டிகள் ஒன்றிணைந்து, மிகப்பெரிய ஐஸ்கட்டியாக உருமாறியது. சுமார் 10 கிலோ எடை அளவுக்கு பெரியதாக மாறிய ஐஸ் கட்டிகளைக் கண்டு அந்த பகுதி மக்கள் வியந்தனர்.

இந்த ஐஸ்கட்டியை தலையில் சுமந்து கொண்டு, அந்த பகுதியைச் சேர்ந்தவர் ஒருவர் வியப்புடன்  ஆடிப்பாடி மகிழ்ந்த வீடியோ  சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது:

சேலம் மாவட்டம் கல்வராயன் மலை பகுதியில் நீண்ட நாட்களுக்கு பிறகு, நேற்று சனிக்கிழமை பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. அப்போது கல்வராயன் மலை தெற்குநாடு ஊராட்சி வெங்காயகுறிச்சி உள்ளிட்ட கிராமங்களில்,  ஐஸ் கட்டி மழை பொழிந்தது.

வெங்காய குறிச்சி கிராமத்தில் விவசாயிகள் பயிர்களை காக்க அமைத்திருந்த பசுமை வலை மீது விழுந்த ஐஸ்கட்டிகள் ஒன்றிணைந்து, 10 கிலோ எடை அளவிற்கு திரண்டது. இதை அந்தப்பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தலையில் தூக்கிவைத்துக்கொண்டு ஆடிப்பாடி மகிழ்ந்தார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி பரவி வருகிறது

இந்த இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள் அந்த அபூர்வ ஐஸ்கட்டியை பார்க்க திரண்டனர்.

இந்த ஐஸ்கட்டி மலையால்,  கல்வராயன்மலையில் தெற்குநாடு ஊராட்சியில் ஏராளமான கிராமங்களில் பயிர்கள் சேதம் அடைந்தது.  இதுகுறித்து தகவலறிந்த பெத்தநாயக்கன்பாளையம் வட்டாட்சியர் வெங்கடேசன் தலைமையிலான வருவாய்த்துறையினர், கல்வராயன்மலை கிராமங்களுக்கு, இன்று ஞாயிற்றுக்கிழமை சென்று சேதத்தை பார்வையிட்டனர். விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

– பெ.பெரியார்மன்னன்