கொல்கத்தா:  பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க தவறிய பெண் முதல்வரான மம்தா பானர்ஜி மீது  எங்களுக்கு நம்பிக்கை இல்லை, அவர் இரட்டை நிலைப்பாட்டை கடைபிடிக்கிறார் என  மேற்குவங்கத்தில் ஒரு கும்பலால் பாலியல்  வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் தந்தை சாடியுள்ளார்.

ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. தனது ஆட்சியில் நடைபெற்ற இந்த கொடூர சம்பவத்தில் அதிரடி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டிய முதல்வர் மம்தா, அதற்கு புறம்பாக ஆதாரங்களை அழிப்பதிலும், எதிர்ப்பவர்களை மிரட்டுவதிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்த கொடூர செயலில் ஒரு கும்பலே ஈடுபட்ட  நிலையில், ஒரே ஒரு மருத்துவ ஊழியர் சஞ்சய் சிங்  என்பவரை மட்டும் குற்றவாளியாகக் கண்டறியப்பட்டு மேற்கு வங்காள போலீசால் கைது செய்யப்பட்டார்.  ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக சிலரை மம்தா அரசு மிரட்டி பேச வைப்பதாகவும் புகார்கள் வருகின்றன.

இதற்கிடையில்,  உயிரிழந்த பெண் அந்த மருத்துவமனையில் சட்டவிரோத போதைப் பொருள் புழக்கத்தை எதிர்த்ததாகவும் அதன்பொருட்டே திட்டமிட்டு அவர் கொல்லப்பட்டுள்ளதாவும் சக மாணவர் ஒருவர் பரபரப்பைக் கிளப்பியுள்ளார். இதனைத் தொடர்ந்து வழக்கு சிபிஐ க்கு மாற்றப்பட்டது.  மேலும் தனது மாநிலத்தின் காவல்துறை பொறுப்பு  அமைச்சராக இரு்நதுெகாண்டு, மாநில காவல்துறைக்கு எதிராகவே போராட்டம் நடத்தி வியப்பை ஏற்படுத்தி உள்ளார். மம்தாவின் அகங்காரத்துக்கு விரைவில் முடிவு கட்டப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், பெண் மருத்துவர் கொலையில், ஏராளமான மர்மங்கள் உள்ளதாகவும், அவை கண்டுபிடிக்கப்படுவதில் தாமதப்படுத்தப்படுவதாகவும்,   உயிரிழந்த பெண்ணின் பெற்றோர் நீதி மன்றத்தில்  மனு தாக்கல் செய்துள்ளனர். மேலும்  தங்கள் மகளின் கொலை தொடர்பாகப் பல்வேறு சந்தேகங்களையும் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்துள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பெண் மருத்துவரிள்ன தந்தை,  இந்த வழக்கைப் போலீசார் கையாண்ட முறையைப் பார்த்ததும், முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் மீதிருந்த நம்பிக்கையை நாங்கள் இழந்து விட்டோம். தற்போது சி.பி.ஐ. முயற்சி எடுத்து வழக்கை விசாரிக்கிறது. சி.பி.ஐ.யிடம் நான், மகளின் டைரியில் உள்ள பக்கம் ஒன்றை கொடுத்திருக்கிறேன் என்றார். [ஆனால், அதில் இடம் பெற்றுள்ள விவரங்களைப் பற்றிக் கூற மறுத்து விட்டார்]

தொடர்ந்து இந்த விவகாரத்தில் மாநில அரசின் நடவடிக்கைகளைக் குறித்து விமர்சித்த அவர், தொடக்கத்தில் மம்தா மீது முழு நம்பிக்கை இருந்தது. ஆனால் இப்போது இல்லை. அவர்கள், எங்களுக்கு நீதி வேண்டும் எனக் கூறுகிறார்கள். ஆனால், இதே விசயங்களைக் கூறும் பொதுமக்களை அவர்கள் கட்டிப்போட முயல்கின்றனர் என்று தெரிவித்தார்.

படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் தாய் பேசுகையில், நாட்டில் உள்ள மக்களுக்கு நாங்கள் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறோம். எங்களது மகளுக்கு நீதி வேண்டிப் போராடி வரும் அனைவருக்கும் நாங்கள் நன்றியுடன் இருக்கிறோம். குற்றவாளிகள் முழுமையாகப் பிடிபட்டு நீதி கிடைக்கும் வரை எங்களுடன் நீங்கள் நிற்க வேண்டும். இனி இப்படியொரு நிலைமை வேறு எந்தத் தாய்க்கும் வரக் கூடாது என்பதே எங்களின் விருப்பம் என்று தெரிவித்துள்ளார்.