
சதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று என வித்தியாசமான களத்தில் வெற்றிப் படங்களை தந்தவர் ஹெச்.வினோத்.
இந்தியில் வெளியான பிங்க் படத்தை தமிழில், அஜித் நடிப்பில் ரீமேக் செய்தார் ஹெச்.வினோத். தற்போது, அஜித் நடிப்பில் வலிமை படத்தை இயக்கி வருகிறார் வினோத் . படம் இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்நிலையில் மூன்றாவது முறையாக அஜித் – வினோத் கூட்டணி இணையப் போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது .
இப்படி ஒரே இயக்குநருடன் தொடர்ச்சியாக பணிபுரிவது அஜித்துக்கு புதிதல்ல. 2014-ல் சிறுத்தை சிவா அஜித்தை வைத்து வீரம் படத்தை இயக்கினார். 2015-ல் வேதாளம் படத்துக்காக சிவாவும், அஜித்தும் மீண்டும் இணைந்தனர். அதன் பிறகு விவேகம், விஸ்வாசம் என தொடர்ச்சியாக அஜித்தை வைத்து படங்கள் இயக்கினார் சிவா. அந்த வரிசையில் தற்போது வினோத்தும் நிகழ்த்த இருப்பதாக கூறப்படுகிறது.
[youtube-feed feed=1]