ஐஸ்வர்யா ராஜேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘க/பெ. ரணசிங்கம்’. பெ.விருமாண்டி இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி கவுரவக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராகப் பணிபுரிகிறார் ஜிப்ரான்.
கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, ‘பூ’ ராம், வேல.ராமமூர்த்தி, பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இவர்களைத் தவிர்த்து மிக முக்கியமான கதாபாத்திரத்தில் ரங்கராஜ் பாண்டே நடித்துள்ளார்.
இந்த படத்தில் ஜி.வியின் தங்கை பவானி ஸ்ரீ நடிகையாக அறிமுகமாகியுள்ளார் .இதற்கு வாழ்த்து தெரிவித்து ஜி.வி.பிரகாஷ் மற்றும் அவரது மனைவி சைந்தவி இருவரும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.


“க/பெ ரணசிங்கம் டீமுக்கு வாழ்த்துக்கள். முதல் படத்தில் நடித்துள்ள பவானி ஸ்ரீக்கு பெஸ்ட் ஆப் லக்” என ஜீவி பிரகாஷ் ட்விட் செய்துள்ளார்.


“என் sister-in-lawவின் முதல் படம் க/பெ ரணசிங்கம். அதிகம் பெருமையாக இருக்கிறது ஸ்வீட்டி. உனக்கு என் வாழ்த்துக்கள். நீ மிரட்டலாகநடித்திருப்பாய் . உன் ஆசைகள் மற்றும் கனவுல அனைத்தும் நிஜமாகட்டும்” என சைந்தவி கூறியுள்ளார்.