முத்துகுமரன் இயக்கத்தில் , ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்பில் மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவில் யோகிபாபு எமனாக நடித்துள்ள படம் ‘தர்மபிரபு ’

இப்படத்தின் டீசரை நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

எமலோகத்தில் எமன் பதவிக்கு எமன் வாரிசான யோகிபாபுவும், சித்ரகுப்தனாக இருக்கும் கருணாகரனும் போட்டியிடுவதை கருவாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது.

இந்த திரைப்படத்தின் டீசர் தான் வெளியாகியுள்ளது.