
ஹாலிவுட்டில் உருவான ட்ராப் சிட்டி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் ஜிவி பிரகாஷ். இதன் மூலம் முதல் முதலாக ஹாலிவுட்டில் கால் பதிக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.
படத்தில் மருத்துவராக வரும் ஜிவி பிரகாஷின் நடிப்பை காண ஆவலில் உள்ளனர் அவரது ரசிகர்கள்.
இந்நிலையில் ஜிவி பிரகாஷின் முதல் இன்டர்நேஷனல் ஆல்பமான கோல்ட் நைட்ஸ் ஆல்பத்தின் இரண்டாம் சிங்கிள் Crying Out பாடல் தற்போது வெளியானது.
தனுஷ் இந்த பாடல் லிரிக் வீடியோவை வெளியிட்டார். ஜூலியா கர்த்தா மற்றும் ஜிவி பிரகாஷ் இசையமைத்து பாடிய இந்த பாடல் வரிகளை ஜூலியா கர்த்தா எழுதியுள்ளார்.
இந்த ஆல்பத்தின் முதல் பாடல் High and Dry பாடல் ஏற்கனவே வெளியானது. அதுமட்டுமல்லாமல் பாப் இசையுலகின் நட்சத்திரம் ஜஸ்டின் பைபர் ஜிவி பிரகாஷை சமூக வலைத்தளத்தில் பின் தொடர ஆரம்பித்தார். இன்டர்நேஷனல் ஆல்பம் படைத்திருக்கும் ஜிவி பிரகாஷை பாராட்டி வருகின்றனர் இசை பிரியர்கள்.
[youtube-feed feed=1]