சென்னை: கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் நடைபெற்ற குட்கா வழக்கு தொடர்பான விசாரணைக்கு நேரில்  ஆஜராக  அதிமுக முன்னாள் அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு சிபிஐ  சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியின்போது தடையை மீறி குட்கா போதை பொருள் விற்பனை செய்யப்பட்டதில் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் ஆட்சியாளர்களுக்கு காவல்துறை உள்பட பல துறைகளின் அரசு அதிகாரிகள் உடந்தையாக இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கை சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இதில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது. இதன் காரணமாக, வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள  அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா  மற்றும் சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ்  மற்றும் அதிகாரிகள்   அக்டோபர் மாதம் 14ந்தேதி நீதிமன்றத்தில்  நேரில் மீண்டும் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

அன்றைய தினம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.