நெல்லை
இன்று சென்னையில் இருந்து நெல்லை வந்த அரசு விரைவு பேருந்தில் துப்பாக்கி, அறிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இன்று சென்னையில் இருந்து நெல்லைக்கு வந்த அரசு விரைவு பேருந்தில் துப்பாக்கி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன். இவ்வாறு. அரசு பேருந்தில் இருந்து துப்பாக்கி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த அரசு பேருந்தில் தடய அறிவியல் துறையினர், கைரேகை நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். சம்பவ இடத்திற்கு வெடிகுண்டு தடுப்பு பிரிவு காவல்துறையினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.